கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Friday, May 22, 2009

மயக்கும் மன்னார்குடி...


மதுக்கூர் வழி சாலை...இந்த ரோட்டு வழியாதான் காந்தி பாதயாத்திரை போனாராம்...(சொன்னா நம்பவா போறீங்க..!?)நாள் 19/02/2008..நேரம் காலை 11 மணி..மழை பெய்து முடித்து சாரல் வீசுகின்ற சாலை..நானும் என் நண்பனும்..ஒரு டீ குடித்துவிட்டு..earphonஇல் இளையராஜா பாட்டுடன்..பைக்கில் மெதுவாக சென்ற பொது எடுத்த போட்டோ இது...சொர்க்கம் இதை விட சிறப்பாகவா இருக்கும்????
எங்கள் ஊரில் உள்ள ஒரு குளம்...(அதான் பார்த்தாலே தெரியுதே!!)
மறுபடியும் அதே குளம்...
கடவுள் ஒருநாள் வரையணும்னு தூரிகை எல்லாம் ரெடி பண்ணிட்டு...பெயிண்ட எடுக்கும்போது வர்ணம் எல்லாம் சிதறி எங்க ஊர் மேல விழுந்திடிச்சாம்....அன்னைலேர்ந்து எங்க ஊர் இப்படித்தானாம்...(கொஞ்சம் ஓவரா போய்டேனோ..?)
என் நண்பர்கள் நான்கு பெரும் இந்தியாவை முன்னேற்றுவது எப்படி என்று வாயில் சிகரட்டுடன் கெட்ட வார்த்தைகளுக்கு மத்தியில் யோசிக்கும் இடம்....!?!?!(மச்சி! அவன தூக்குறோண்டா..)
பட்டுகோட்டை டு மன்னார்குடி சாலை...வழி: மதுக்கூர்
the best colour ever in the world...
(அப்புறம் என்னப்பா.. மன்னார்குடிக்கு ஒரு டூர் போட்ற வேண்டியது தான...!?)

No comments:

Post a Comment