கவனிக்க..
கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

இத்துனூண்டு சைக்கிள்
பெரீய்ய பொம்மை
கத்திரிப்பூ நிற கவுன்
மொழுக்கென்று இருக்கும் பழங்கள்
கண்ணும் மனசும் விரிய விரிய கண்டதையெல்லாம்
களிபொங்க சொன்னால் செல்லமகள்
திரும்பும் வழிநெடுகிலும் வீடடைந்த பின்னும்
கைதேர்ந்த வேசியைப்போல் சிங்காரிதிருக்கும்
இக்கடைவீதியின் பண்டங்கள்
பார்த்துக்கொள்ள மட்டுமே தமக்கென்று
இயல்பிலேயே தெரிந்திருக்கிறது இல்லாதவன்
பிள்ளைக்கு....!!

குங்கும போட்டு பட்டாடை சகிதம்
கழுதையும் கழுதையும்
கலங்கிபோய் நின்றிருந்தன....
பூமாலையைப் பிய்த்து தின்ற குரங்குக்கும்
வாய்ப்பூன் போடப்பட்ட நரிக்கும்
அட்சதை போட அமைச்சர் வந்திருந்தார்!
பூணூலை உருவிவிட்டுக் கொண்டு
ஒற்றை விரல் கொட்டும் ஐயரின் முன்னால்
மஞ்சள் குளித்த ஓணானும்
காலில் கயிறு கட்டிய தவளையும்...
மழை வேண்டி நடந்த
திருமணங்களின் தொகுப்பைத்
தொலைகாட்சியில் பார்த்தபடி
செல்வி தனலட்சுமி, வயது முப்பத்தாறு!!
- தாமரை

பேருந்து நெரிசலில்
சிக்கி தவித்த அந்த
தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்.
இறங்கி செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்...
கைபிள்ளையின்
கால் கொலுசை
தடவியபடி!

யாருமற்ற அகாலத்தின்
சித்திரம் போலிருக்கிறது
ரயில்நிலையம்
சித்திரத்தை
சிதைத்தபடி செல்கிறது
அதிகாலையின் முதல்வண்டி.....
தலைமை
இதென்ன கொடுமை..
இங்கே
எழைகளின்
தலைவர்களை
எல்லாருமே
கோடீஸ்வரர்கள்.....