கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Sunday, May 31, 2009

black hole..?!?!

இரண்டு நண்பர்கள் நடந்து வரும் பாதையில் ஒரு பெரிய குழி இருந்ததாம்,
அதோட ஆழம் என்னன்னு தெரிஞ்சிக்க ரெண்டு பேருகிட்டயும் ஆசையாம்..(சென்னை பசங்க போலிருக்கு!!),,முதல்ல ஒருத்தன் ஒரு நீளமான குச்சிய எடுத்து விட்டு பாத்தா...ஒன்னும் தட்டுப்படவே இல்லையாம்! சரின்னு சொல்லிட்டு இன்னொருத்தன் ஒரு சின்ன கல்ல எடுத்து உள்ள போட்டானாம்...எந்த சத்தமும் திரும்பி வரலையாம்!! இந்த முறை அத விட கொஞ்சம் பெரிய கல்ல எடுத்து போட்டு பார்த்தா...இப்பவும் எந்த சத்தமும் திரும்பி வரலையாம்...இது என்னடா வித்தியாசமா இருக்கேன்னு குழம்பி போயி(ஒருவேள black hole இதுதானோ..!!)
இந்த வாட்டி மிஸ் ஆகாதுடா மச்சான்னு அங்க இருக்கிறதிலேயே பெரிய கல்ல பார்த்து ஒன்ன தூக்கி உள்ள போட்டாங்களாம்....இந்த வாட்டியும் எந்த சத்தமும் வரலையாம்...இன்னக்கி இத கண்டுபிடிக்காம போறதில்லைன்னு அங்கேயே யோசிச்சிகிட்டு நின்னதூரத்திலேர்ந்து ஒரு கருப்பு ஆடு குடு குடுன்னு ஓடி வந்து ஒரே ஜம்ப்ள அந்த குழிக்குள்ள குதிச்சிடிச்சாம் ......இவங்களுக்கு ஒரே ஆச்சரியம்...என்னடா மச்சி எதுக்கு இந்த ஆடு உள்ள குதிச்சிச்சு,இந்த குழிக்குள்ள அப்படி என்னதான் இருக்கு அப்படின்னு !! அந்த நேரத்துல ஒரு விவசாயி அந்த பக்கமா எதையோ தேடிகிட்டு வந்தானாம்..என்னங்க என்ன தேடுறீங்க- இது அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன்..

ஒண்ணுமில்லீங்க என்னோட ஆட்ட காணும் அத தான் தேடிகிட்டு இருக்கேன் -இது விவசாயி,

இப்பதாங்க ஒரே ஓட்டமா ஓடி வந்து இந்த
குழிக்குள்ள விழுந்தது அதத்தான் நாங்க யோசிச்சிகிட்டு இருக்கோம்...

உடனே விவசாயி: அப்படியெல்லாம் இருக்காதே அத நான் ஒரு பெரிய கல்லுலல்ல கட்டி வச்சிருந்தேன்....

நண்பர்கள்: ?!?!?!?!?!!?

நச்சின்னு நாலு வரி....

'சிட்டி' சென்

நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை

முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை

கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை

அடுக்குபானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை

ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று...

-தாயம்மா


பாதசாரிகள் கவனத்திற்கு


கடந்து போகும்
ஜோடி கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிகலைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே....!

- வனவை தூரிகா

கவனம்

நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி...

-சே. சதாசிவம்


bakthi


நவகிரங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிகொண்டிருக்கிறது மனசு.
எதை வேண்டி
எதை பெறுவது...?

-மாசிலா விநாயகமூர்த்தி

குழந்தை

மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு !

- பி.பழனிசாமி
அம்மா



அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்...

அம்மா
என்றேன் உடனே!

கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னத்தை
சொல்வேன்

நீ.. என்று !

- தாஜ்

தனிமை..


கதை சுருக்கம் - வாழ்கையில் முதல் முறையாக தலைநகரை (அதாங்க டெல்லி !) சுற்றி பார்க்க போகிறோம் என்று மனதில் கோட்டை கட்டிக்கொண்டு எதோ ஒரு வண்டியில் (hyndai..) ஏறி பாதி தூரம் போனால், வண்டி ரிப்பேர்!!!! அடுத்த கார் வர இரண்டு மணி நேரம் ஆனதால் டெல்லியை ஒரே இடத்தில் நின்று போன காருக்குலேயே சுத்தி சுத்தி பார்த்தோம்...அட போங்கடா என்று 'வெறுப்பில்' என் friend கார் உள்ளேயே தூங்கி விட்டான்....அப்போது கிளிக்கியது ....


நரகத்தின் நுழைவாயில்....

something strange...



abandoned...இதற்கு பின்னால் என்ன கதை இருக்குமோ...??

Friday, May 29, 2009

அட்வைஸ்..(நான் சொல்லலீங்க...)

அனைத்து இந்தியர்களுக்கும்...


இது ச்சும்மா லுல்லுலாயி....

அட...




இவர் தமிழ் நாடு என்பதில் பெருமை எனக்கு....

திரு.நாஞ்சில் நாடன்..

from விகடன்.....




சிறகு இரண்டு இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் இல்ல..?

thought of sketch her..



இது சீன்...

தொலைநோக்கு பார்வைன்னு சொல்லுவாங்களே அது இது தானோ...!!!

நீயா..?

அழகு..





பிளேடு மாமா பிளேடு....



மறந்து விடாதீர்கள்....





இதையும் சகித்து கொண்டு வாழ்வதால் தான் சில சமயம் நாம் இந்தியன் என்று நினைக்கும் பொழுது கேவலமாக இருக்கிறது.....

ச்சும்மா..ச்சும்மா.....



lovers special....






டூன்ஸ்..........

நிலம்..climate..மக்கள்..இன்னும் ஏராளம்... அனைத்திலும் இரண்டு extremes..உள்ள நாடு நமது நாடத்தான் இருக்கும்...!!!



இதை விட தத்ரூபமாய் இந்தியாவை படம் பிடிக்க முடியாது....(மதன் toon..)




தொடர்ந்து ஆறு முறை தொடர்ச்சியாக ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்கிய ஒரே நாட்டின் நிலைமை.....!!!!
(கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியாது என்பதற்காகத்தான் இன்னமும் அது ஒலிம்பிக்கில் சேர்க்க படவில்லை....உண்மையிலேய அது முட்டாள்கள் விளையாடும் விளையாட்டுதான்....படித்தவர்களாவது விழித்து கொள்ளுங்கள் ....!!)

சத்தம் போடாம சிரிங்க....













ஆனந்த விகடன் மற்றும் வார மலர்...

இம்சை அரசன்..!!!





தொடர் ஜோக்ஸ்..

நம்ம சாதிகார பயடா இவன் ...!!!!



Wednesday, May 27, 2009

கேரக்டர்ஸ்...



பெயர்:shailan parkar(கண்ணாடி அணிந்திருப்பவர்...)..specialized in கமர்ஷியல் food photography...ஒரு studio lectureஇன் போது...http://www.shailanparker.com/
(well experienced and very nice person...)







prof.anupam pal (biological science), serious photographer...நான் எடுக்கும் போட்டோவுக்கு கமெண்ட் கொடுத்து செதுக்குபவர்....iit kanpur பொன்விழா stamp வெளியீட்டிற்கு இவர் எடுத்த படம் select ஆகி இருக்கிறது...http://www.palphotos.com/ photographyஇல் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தளம்..


இந்த போஸ் செய்யுறதுக்கு 20 ருபாய் வாங்கிகிட்டார் இந்த தாத்தா..(கலி முத்திடுத்து...!)


டீ விற்கும் சிறுவன்..(see glimpse in his eyes..)

பொதுவாகவே போஸ் கொடுக்க பிரியபடுகிறார்கள் மலைவாழ் மக்கள்...லைக் திஸ் ஒன்..




நம்ம ஊர் அனுமான் வேஷம் மாதிரி இது ஹிமாச்சல் பகுதியில்..