கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Saturday, February 20, 2010

உனது வருகை...



புளிய மரங்களின் மூச்சுக்காற்றில்
ஒளிரும் மஞ்சள் விளக்கின் கீழ்
விதியைப் புலர்த்தும் கர்வத்துடன்
பின்னிரவில் கதவைத் திறந்தனர்
செவிலியர்.
வலியின் தீவிரம்
பரவத் தொடங்கிய நேரத்தில்
தேங்கிய அன்போடு
எனைவிட்டு பிரிந்து சென்றன
அவளது கண்கள்.
நம்பிக்கையும்
நம்பிக்கையின்மையும்
பிராத்தனையும்
எண் கைகளில் ஏதுமற்று
காலத்தின் முன்னே
மண்டியிட்டு நின்றேன்
பெயர் தெரியாத பூசிகளும்,
பறவைகளும், தவளைகளும்,
வண்டுகளும்
வாழ்ந்தலையும் இவ்விடத்தில்
உனது வருகை
இனிதே நிகழ்ந்தது.
உனது வருகையை கொண்டாடும்
விதத்தில் உன்னைச் சுற்றி
புளியமரங்கள்
பூத்திருந்தது மகளே........
- சீனு ராமசாமி