எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆடோவில் ஏறினேன்
சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப் பார்த்து தயங்கி
அழாதீங்க என்றான்
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபத்து ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லறை
எண்ணிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான்
அந்த மீதி சில்லரையாவது வாங்காமல்
விட்டுருக்கலாம்....!
கவனிக்க..
கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!
Friday, September 11, 2009
Monday, August 3, 2009
mystic பாரதி...
தேடிச் சோறு நிதந்தின்று -பல
சின்னஞ்ச் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !
சின்னஞ்ச் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து -நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ !
- மகாகவி பாரதியார்
Labels:photography,paintings
தமிழ் இனிமை...
எனக்கு பிடித்த குறள்கள்...

(அறத்துப்பால் - இல்லறவியல் - புகழ் -எண் : 236 )
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
(மு.வரதராசனார் : ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.)

(பொருட்பால் - படையியல் - படைசெருக்கு - எண் : 772)
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
(சாலமன் பாப்பையா :காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.)

ஆழ்வார் பாடல்கள்..

வாரண மாயிரம் சூழ வலம்வந்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக்கணாக் கண்டேன் தோழீ நான்
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக்கணாக் கண்டேன் தோழீ நான்
- ஆண்டாள்
Labels:photography,paintings
தமிழ் இனிமை...
பட்டினத்தார் பாடல்கள்

இருப்பதுபொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே !
ஒருத்தருக்கும் தீங்கினை யுன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் !
ஒருத்தருக்கும் தீங்கினை யுன்னாதே - பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் !
- பட்டினத்தார்
இளைஞனுக்கு
நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் தேடி
நலமொன்னும் இல்லாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல்
பொலபொலவெனக் கலகலவெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைதிட்ட குரங்கதனை போல
அகபட்டீர் கடந்துழல அகபட்டீர் நீரே
நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் தேடி
நலமொன்னும் இல்லாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல்
பொலபொலவெனக் கலகலவெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைதிட்ட குரங்கதனை போல
அகபட்டீர் கடந்துழல அகபட்டீர் நீரே
- பட்டினத்தார்
Labels:photography,paintings
தமிழ் இனிமை...
Tuesday, June 23, 2009
பால ஞானம்

இத்துனூண்டு சைக்கிள்
பெரீய்ய பொம்மை
கத்திரிப்பூ நிற கவுன்
மொழுக்கென்று இருக்கும் பழங்கள்
கண்ணும் மனசும் விரிய விரிய கண்டதையெல்லாம்
களிபொங்க சொன்னால் செல்லமகள்
திரும்பும் வழிநெடுகிலும் வீடடைந்த பின்னும்
கைதேர்ந்த வேசியைப்போல் சிங்காரிதிருக்கும்
இக்கடைவீதியின் பண்டங்கள்
பார்த்துக்கொள்ள மட்டுமே தமக்கென்று
இயல்பிலேயே தெரிந்திருக்கிறது இல்லாதவன்
பிள்ளைக்கு....!!
செல்வி

குங்கும போட்டு பட்டாடை சகிதம்
கழுதையும் கழுதையும்
கலங்கிபோய் நின்றிருந்தன....
பூமாலையைப் பிய்த்து தின்ற குரங்குக்கும்
வாய்ப்பூன் போடப்பட்ட நரிக்கும்
அட்சதை போட அமைச்சர் வந்திருந்தார்!
பூணூலை உருவிவிட்டுக் கொண்டு
ஒற்றை விரல் கொட்டும் ஐயரின் முன்னால்
மஞ்சள் குளித்த ஓணானும்
காலில் கயிறு கட்டிய தவளையும்...
மழை வேண்டி நடந்த
திருமணங்களின் தொகுப்பைத்
தொலைகாட்சியில் பார்த்தபடி
செல்வி தனலட்சுமி, வயது முப்பத்தாறு!!
- தாமரை
நன்றி
Monday, June 1, 2009
Sunday, May 31, 2009
black hole..?!?!
இரண்டு நண்பர்கள் நடந்து வரும் பாதையில் ஒரு பெரிய குழி இருந்ததாம்,
அதோட ஆழம் என்னன்னு தெரிஞ்சிக்க ரெண்டு பேருகிட்டயும் ஆசையாம்..(சென்னை பசங்க போலிருக்கு!!),,முதல்ல ஒருத்தன் ஒரு நீளமான குச்சிய எடுத்து விட்டு பாத்தா...ஒன்னும் தட்டுப்படவே இல்லையாம்! சரின்னு சொல்லிட்டு இன்னொருத்தன் ஒரு சின்ன கல்ல எடுத்து உள்ள போட்டானாம்...எந்த சத்தமும் திரும்பி வரலையாம்!! இந்த முறை அத விட கொஞ்சம் பெரிய கல்ல எடுத்து போட்டு பார்த்தா...இப்பவும் எந்த சத்தமும் திரும்பி வரலையாம்...இது என்னடா வித்தியாசமா இருக்கேன்னு குழம்பி போயி(ஒருவேள black hole இதுதானோ..!!)
இந்த வாட்டி மிஸ் ஆகாதுடா மச்சான்னு அங்க இருக்கிறதிலேயே பெரிய கல்ல பார்த்து ஒன்ன தூக்கி உள்ள போட்டாங்களாம்....இந்த வாட்டியும் எந்த சத்தமும் வரலையாம்...இன்னக்கி இத கண்டுபிடிக்காம போறதில்லைன்னு அங்கேயே யோசிச்சிகிட்டு நின்னதூரத்திலேர்ந்து ஒரு கருப்பு ஆடு குடு குடுன்னு ஓடி வந்து ஒரே ஜம்ப்ள அந்த குழிக்குள்ள குதிச்சிடிச்சாம் ......இவங்களுக்கு ஒரே ஆச்சரியம்...என்னடா மச்சி எதுக்கு இந்த ஆடு உள்ள குதிச்சிச்சு,இந்த குழிக்குள்ள அப்படி என்னதான் இருக்கு அப்படின்னு !! அந்த நேரத்துல ஒரு விவசாயி அந்த பக்கமா எதையோ தேடிகிட்டு வந்தானாம்..என்னங்க என்ன தேடுறீங்க- இது அந்த ரெண்டு பேர்ல ஒருத்தன்..
ஒண்ணுமில்லீங்க என்னோட ஆட்ட காணும் அத தான் தேடிகிட்டு இருக்கேன் -இது விவசாயி,
இப்பதாங்க ஒரே ஓட்டமா ஓடி வந்து இந்த
குழிக்குள்ள விழுந்தது அதத்தான் நாங்க யோசிச்சிகிட்டு இருக்கோம்...
உடனே விவசாயி: அப்படியெல்லாம் இருக்காதே அத நான் ஒரு பெரிய கல்லுலல்ல கட்டி வச்சிருந்தேன்....
நண்பர்கள்: ?!?!?!?!?!!?

நச்சின்னு நாலு வரி....
'சிட்டி' சென்
நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை
முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை
கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை
அடுக்குபானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை
ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று...
-தாயம்மா
பாதசாரிகள் கவனத்திற்கு
கடந்து போகும்
ஜோடி கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிகலைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே....!
- வனவை தூரிகா
கவனம்
நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி...
-சே. சதாசிவம்
bakthi
நவகிரங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிகொண்டிருக்கிறது மனசு.
எதை வேண்டி
எதை பெறுவது...?
-மாசிலா விநாயகமூர்த்தி
குழந்தை
மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு !
- பி.பழனிசாமி
நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை
முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை
கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை
அடுக்குபானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை
ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று...
-தாயம்மா
பாதசாரிகள் கவனத்திற்கு
கடந்து போகும்
ஜோடி கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிகலைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே....!
- வனவை தூரிகா
கவனம்
நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி...
-சே. சதாசிவம்
bakthi
நவகிரங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிகொண்டிருக்கிறது மனசு.
எதை வேண்டி
எதை பெறுவது...?
-மாசிலா விநாயகமூர்த்தி
குழந்தை
மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு !
- பி.பழனிசாமி
தனிமை..
கதை சுருக்கம் - வாழ்கையில் முதல் முறையாக தலைநகரை (அதாங்க டெல்லி !) சுற்றி பார்க்க போகிறோம் என்று மனதில் கோட்டை கட்டிக்கொண்டு எதோ ஒரு வண்டியில் (hyndai..) ஏறி பாதி தூரம் போனால், வண்டி ரிப்பேர்!!!! அடுத்த கார் வர இரண்டு மணி நேரம் ஆனதால் டெல்லியை ஒரே இடத்தில் நின்று போன காருக்குலேயே சுத்தி சுத்தி பார்த்தோம்...அட போங்கடா என்று 'வெறுப்பில்' என் friend கார் உள்ளேயே தூங்கி விட்டான்....அப்போது கிளிக்கியது ....
Friday, May 29, 2009
மறந்து விடாதீர்கள்....
இதையும் சகித்து கொண்டு வாழ்வதால் தான் சில சமயம் நாம் இந்தியன் என்று நினைக்கும் பொழுது கேவலமாக இருக்கிறது.....
Labels:photography,paintings
கொஞ்சம் சீரியஸ்...
டூன்ஸ்..........
நிலம்..climate..மக்கள்..இன்னும் ஏராளம்... அனைத்திலும் இரண்டு extremes..உள்ள நாடு நமது நாடத்தான் இருக்கும்...!!!
தொடர்ந்து ஆறு முறை தொடர்ச்சியாக ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்கிய ஒரே நாட்டின் நிலைமை.....!!!!
(கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியாது என்பதற்காகத்தான் இன்னமும் அது ஒலிம்பிக்கில் சேர்க்க படவில்லை....உண்மையிலேய அது முட்டாள்கள் விளையாடும் விளையாட்டுதான்....படித்தவர்களாவது விழித்து கொள்ளுங்கள் ....!!)
(கிரிக்கெட்டில் விளையாடும் ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியாது என்பதற்காகத்தான் இன்னமும் அது ஒலிம்பிக்கில் சேர்க்க படவில்லை....உண்மையிலேய அது முட்டாள்கள் விளையாடும் விளையாட்டுதான்....படித்தவர்களாவது விழித்து கொள்ளுங்கள் ....!!)
Labels:photography,paintings
கொஞ்சம் சீரியஸ்...
Subscribe to:
Comments (Atom)