கவனிக்க..

கவிதைகள், ஜோக்குகள் இவை இரண்டும் என் கற்பனையில் உதித்தவை அல்ல....!!!

Sunday, May 31, 2009

நச்சின்னு நாலு வரி....

'சிட்டி' சென்

நாரை நடக்கும்
குளத்தில்
நண்டு பிடிச்சதில்லை

முங்கு நீச்சல்
போட்டியில்
மூச்சுத் திணறியதில்லை

கண் பறிச்சு
வெல்லமிட்டு
வெடி தேங்கா தின்னதில்லை

அடுக்குபானை
அரிசி திருடி
ஆற்றுச் சோறு ஆக்கியதில்லை

ஆனாலும் சொல்கிறாய்
ஐயாம் லிவிங் என்று...

-தாயம்மா


பாதசாரிகள் கவனத்திற்கு


கடந்து போகும்
ஜோடி கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிகலைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே....!

- வனவை தூரிகா

கவனம்

நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி...

-சே. சதாசிவம்


bakthi


நவகிரங்களை வழிபடுகையில்
சுற்றுகளை எண்ணுவதிலேயே
சுற்றிகொண்டிருக்கிறது மனசு.
எதை வேண்டி
எதை பெறுவது...?

-மாசிலா விநாயகமூர்த்தி

குழந்தை

மெள்ள நகரும்
பேருந்தின் ஜன்னலில்
அவசரமாய் கையேந்தும்
பிச்சைக்காரியின்
இடுப்புக் குழந்தை
டாட்டா காட்டுகிறது
பஸ் பயணிகளுக்கு !

- பி.பழனிசாமி

No comments:

Post a Comment