
"கி,ராஜநாராயணனின் 'கதவு' என்ற சிறுகதையில் இருந்து - ஒரு விவசாய கூலி தந்தைக்குப் பிறந்த கிராமத்துக் குழந்தைகள். அவர்கள் வீட்டுக் கதவு தான் அவர்களுக்கு பஸ், ட்ரெயின் எல்லாம். அந்த கதவில் ஏறிக் குழந்தைகள் வீட்டின் உள்ளே இருந்து வெளியே வருவது, வெளியே இருந்து உள்ளே போவதிலுமாக....அந்த விளையாட்டு பயணத்தின் அப்படி ஒரு மன நிறைவு. குதூகலம், கொண்டாட்டம்! கதையின் இறுதியில் தந்தை வங்கியில் வாங்கிய கடனை கட்டாததினால், வங்கி அதிகாரிகள் வீட்டு கதவை மட்டும் ஜப்தி செய்துவிடுவார்கள். தங்களுக்கான கதவுலகத்தை இழந்து கலங்கி நிற்பார்கள் குழந்தைகள். இதேபோல் கிராமத்து நண்பர் ஒருவர், பல வருடங்களாக தன் வீட்டில் இருந்த பூவரசு மரத்தை வெட்டி இருக்கிறார், அவரது குழந்தையோ மரத்தை வெட்ட கூடாது என்று ஓவென அழுதிருக்கிறது . 'நான் உனக்கு இந்த மரத்தில் பம்பரம் செய்து தருகிறேன் ' என்று சமாதானம் சொல்லி மரத்தை வெட்டி இருக்கிறார். "
வளர்ந்த மனிதர்களின் பிரச்சனைகளும் தேவைகளும் குழந்தைகளுக்கான உலகத்தைச் சிதைத்துக்கொண்டு இருக்கிறது என்பது தான்உண்மை
- சா.தூரன், திருநெல்வேலி


No comments:
Post a Comment